புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 ஜன., 2020

மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு திணைக்கள (சிஐடி) பொலிஸ் அதிகாரிகள், வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதன்போது, கொழும்பில் வீடுகள் தோறும் பொலிஸார் மேற்கொண்ட விபரக்கோவை திரட்டு என்ற பொலிஸ் பதிவை ஏன் தடுத்து நிறுத்தினீர்கள்?.

இதன்மூலம் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு குற்றவாளிகளை முன்கூட்டியே கண்டு பிடிக்க முடியாமல் போனதை ஏற்றுக் கொள்கிறீர்களா?.

என்று விசாரணைகளை மேற்கொண்ட குற்றவியல் புலனாய்வு திணைக்கள பொலிஸ் அதிகாரிகள், அவரது வீட்டுக்கு சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.