28 மார்., 2020

கொரோனா வைரசுக்கு பலியான 16 வயது சிறுமி

கொரோனா வைரஸ் காரணமாக 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த பிரான்சையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முன்னதாக இதுகுறித்த முதல்கட்ட தகவல்கள் நாம் வெளியிட்டிருந்தோம். தற்போது உயிரிழந்த சிறுமி குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Julie A. எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார். அவர் Essonne மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். கடந்த சில நாட்களாக அவர் உடல்நலம் குன்றியிருந்த நிலையில், Essonne மாவட்டத்தில் உள்ள Longjumeau மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அவர் உயிரிழந்திருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் Necker மருத்துவமனை மருத்துவர்கள் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கும் போது 'இது ஒரு கணிக்க முடியாத சம்பவம். விதிவிலக்கான நிகழ்வு' என குறிப்பிட்டனர்.
தவிர, உயிரிழந்த சிறுமிக்கு வேறு ஏதேனும் நோய்கள் இருந்துள்ளதா என்ற ரீதியில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.