புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 மார்., 2020

2019 இறுதியில் நிமோனியா – ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி… எதற்கு தெரியுமா?

இத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, 2019 இறுதியிலேயே கொரோனா வைரஸ் இத்தாலியில் பரவ தொடங்கியிருக்கலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது.

இத்தாலியில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள Lombardy பகுதியில் கடந்த ஆண்டின் இறுதியில் அசாதாரண எண்ணிக்கையில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் அதிகரித்துள்ளது.

அதுவும் Lombardy பகுதியில் உள்ள மிலன் மற்றும் லோடி நகரங்களில்தான் வழக்கத்துக்கு மாறான எண்ணிக்கையில் அக்டோபருக்கும் டிசம்பருக்கும் இடையில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் அதிகரித்துள்ளது.

மிலன் பல்கலைக்கழக தொற்று நோய் நிபுணரான Adriano Decarli, 2019ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் நிமோனியா காய்ச்சல் மற்றும் ப்ளூ காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் சிலர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


அவர்களுடைய மருத்துவமனை ஆவணங்களை ஆய்வு செய்யும் Decarli, அப்போதே இத்தாலியில் கொரோனா பரவத்தொடங்கிவிட்டதா என்பதை அறிவதற்காக முயற்சி செய்துவருகிறார்.

ஒரு வேளை, 2019 இறுதி வாக்கிலேயே கொரோனா வைரஸ் இத்தாலியில் இருந்திருக்கும் என்றால், அது நீண்ட காலமாகவே ஏன் கண்டுபிடிக்கப்படாமலே இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால், மீண்டும் ஒரு கொள்ளைநோய் தாக்குதல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்கு அது உதவியாக இருக்கும் என்கிறார் Decarli.

தனது ஆய்வு முடிந்ததும், ஏற்கனவே அந்த காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து ஆராயும் திட்டமும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் மற்ற சில அறிவியலாளர்கள் Decarliயின் கூற்றை மறுத்துள்ளனர்.

அந்த காலகட்டத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்களின் உடலிலிருந்து மாதிரிகளை எடுத்து அவற்றை ஆராய்ந்து, அவற்றில் கொரோனா இருந்தது என்று உறுதி செய்தால் மட்டுமே இந்த கூற்றை ஒப்புக்கொள்ளமுடியும் என்று அவர்கள் கூறியுள்ளன