புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2020

போதகரின் மனைவி மூலம் கொரோனா பரவியதா? - 214 சமுர்த்தி பயனாளிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளாகிய சுவிஸ் மதபோதகரை சந்தித்து பேசிய, மானிப்பாயை சேர்ந்த மற்றொரு போதகரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை வழங்கியுள்ளதால் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அந்த சமுர்த்திக் கொடுப்பனவை பெற்றவர்கள் என அத்தனை பேரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் அவர் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற- அவருடன் தொடர்பு வைத்திருந்த மானிப்பாயை சேர்ந்த போதகர் ஒருவரின் மனைவி சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார். அவர் அண்மையில் 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கியுள்ளார். எனவே அவரிடம் இருந்து சமுர்த்தி கொடுப்பனவினை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்

ad

ad