புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 மார்., 2020

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் பரிதாபம்

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகளில் செவிலியர்கள் பலர் இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எவருக்கேனும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் முடிந்தவரை குடியிருப்பிலேயே தங்க வேண்டும் எனவும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தாலும்,

மருத்துவமனை ஊழியர்களின் நிலை சுவிட்சர்லாந்தில் வேறாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Waid மற்றும் Triemli சிற்றி மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் தொண்டை புண், மூக்கில் நீர் வழிதம் மற்றும் இருமலுடனே தொடர்ந்து பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


ஆனால் இவர்களில் யாருக்கும் காய்ச்சல் இல்லை என மருத்துவமனை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதே நிலை, சுவிட்சர்லாந்தின் பல மருத்துவமனைகளில் நடந்தேறுவதாகவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, சுவிட்சர்லாந்தில் சில சுகாதார ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.