புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 மார்., 2020

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இத்தாலியில் பலியான முதல் இலங்கையர்! வெளியானது தகவல்பிரான்சிலும் ஒரு தமிழர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் சிகிச்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

இத்தாலியில் கொரோனா தாக்கத்திற்கு இலக்காகியிருந்த 70 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பலியான முதல் இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், மருத்துவ அறிக்கைகள் வெளிவரும் வரை அந்த நபர் உண்மையில் கொரோனா வைரஸினால் இறந்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.