புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 மார்., 2020

கொரோனாவிற்கு எதிராக இரவு பகல் பாராது தமது உயிரை துச்சமென மதித்து நிறைபணி ஆற்றும் யாழ்.வைத்தியர்கள்

இன்று சர்வதேச ரீதியாக பாரிய தொற்று நோயாக உருக்கொண்டு எங்கும் வியாபித்து இருக்கும் கொடிய அரக்கன் கொரோனாவின் பாதிப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உலக வல்லரசுகளை கூட ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கும் இந்த கொரோனாவிற்கு எதிராக பல நாடுகளும் பலவிதமாக செயற்பட்டு அதனை கட்டுப்படுத்த முனைப்பு காட்டிவரும் நிலையில் இலங்கையும் இதனை கட்டுப்படுத்த பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக வைத்தியர்கள், தாதியர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் தமது உயிரை துச்சமென மதித்து ஜீவகாருண்யத்துடனும் தியாகத்திடனும் தமது பணியினை பவித்திரமாக ஆற்றுகின்றனர்.

அது போலவே யாழ்.போதனா வைத்தியசாலையிலும் பல வைத்தியர்களும் தாதியர்களும் கொரோனாவிற்கு எதிராக இரவு பகல் என பாராது தமது உயிரை துச்சமென மதித்து நிறைபணி ஆற்றுகின்றனர். இவர்களின் இத்தகைய பணிக்கு தலை வணங்குகின்றோம்.

எமது ஊரைச்சேர்ந்தவரும் தாதிய உத்தியோகத்தருமான வி.கிருஸ்ணகுமரன் அவர்களும் அவர்களோடு அர்பணிப்பாக சேவையாற்றும் மற்றைய தாதிய உத்தியோகத்தர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் இக் கொடிய கொரோனாவிற்கு எதிராக போராடுகின்றனர். அல்லும் பகலும் அயராது தியாகத்துடன் தமது பணியை ஆற்றுகின்றனர்.


எமக்காக இவர்கள் ஆற்றும் தியாகங்களை வார்த்தைகளால் கூறிவிட முடியாது.

உங்களின் உயரிய தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம். தொடரட்டும் உங்கள் நற்பணி