புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 மார்., 2020

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா: மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து முடிவு

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களது மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

The Tages Anzeiger என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் (மார்ச்) 5ஆம் திகதி, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள சுவிஸ் அரசு, மக்களை வீடுகளுக்குள் இருக்கவும், ஐந்து பேருக்கு மேல் கூடுவதை தடுக்கவும் உத்தரவிட்டுள்ளதோடு, மீறினால் 100 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

என்றாலும், முழு ஊரடங்கு உத்தரவு சுவிட்சர்லாந்தில் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.

இந்நிலையில், கூடுதலாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக Tages Anzeiger என்ற நாளிதழ் தெரிவித்துள்ளது.

அவற்றை இரண்டு கட்டமாக மேற்கொள்ள இருப்பதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக, தினமும் மாலை 6 மணிக்குமேல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.


அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்வது அல்லது மருத்துவமனைக்கு செல்வது போன்ற விடயங்களுக்கு மட்டும் அப்போது அனுமதியளிக்கப்படும்.

அதன் பிறகு, மக்கள் உத்தரவுகளை கடைப்பிடித்து நடக்கிறார்களா என்பது, அவர்களது மொபைல் டேட்டாவை ஆராய்வதின் மூலம் கண்காணிக்கப்படும்.

அப்படி அவர்கள் விதிகளை கடைப்பிடிகவில்லை என்பது தெரியவந்தால், இத்தாலி மற்றும் பிரான்ஸில் உள்ளதுபோல, முழு ஊரடங்கு உத்தரவு சுவிட்சர்லாந்திலும் பிறப்பிக்கப்படும்.

ஏற்கனவே பல நாடுகள், மக்களின் சம்மதத்துடனோ, சம்மதம் இன்றியோ, அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா இல்லையா என்பதை கண்காணிப்பதற்காக அவர்களது மொபைல் டேட்டாவை ஆராய்ந்துகொண்டுதான் இருக்கின்றன