புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2020

24 மணித்தியாலங்களில் 1169 பேர் -கொரோனாவால் ஒரே நாளில் ஆகக்கூடிய உயிரிழப்பை பதிவு செய்துள்ள அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா புதிய ஆகக்கூடிய பதிவை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 1169 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இந்தநிலையில் அங்கு தொழில் இழந்தோர் எண்ணிக்கை 66 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஸ்பெய்னில் மீண்டும் இரண்டாவது நாளாக ஒருநாளில் 932பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 950 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வடகொரியாவில் இதுவரை ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளிக்கூட கண்டறியப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸின் முக்கிய இடங்களாக இருந்த சீனா மற்றும் தென்கொரியா ஆகியவற்றின் எல்லைகளை கொண்டிருக்கின்றபோதும் தமது நாட்டில் இன்னும் ஒருவராவது கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்படவில்லை என்று அந்த நாட்டின் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவின் ராய்பூரில் புதிதாக பிறந்த ஆண் பெண் இரட்டையர்களுக்கு கொரோனா மற்றும் கொவிட் என்ற பெயரிடப்பட்டுள்ளது.

ad

ad