-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

3 ஏப்., 2020

கொரோனா பாதிப்பு: உலகின் மிகப்பெரிய சந்தையை சவக்கிடங்காக்கும் பிரான்ஸ்!

பிரான்சில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,387ஆகியுள்ள நிலையில்,உலகின் மிகப்பெரிய சந்தையான தன் நாட்டு சந்தை ஒன்றை தற்காலிகமாக சவக்கிடங்காக மாற்றியுள்ளது அந்நாடு.

பாரீஸுக்கு வெளியில் அமைந்துள்ள Rungis சந்தையிலுள்ள அரங்கம் ஒன்றை பொலிசார் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை வைப்பதற்கான சவக்கிடங்காக மாற்றி வருகிறார்கள்.

அப்பகுதியிலுள்ள இறுதிச்சடங்கு மையங்கள் ஏற்கனவே நிரம்பி வழிவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


இன்று முதல் அந்த சவக்கிடங்கில் உடல்கள் வைக்கப்பட உள்ளதாக நகர பொலிஸ் துறைத்தலைவர் Didier Lallement தெரிவித்துள்ளார்.

அதே இடத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் கூடி தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு இறுதி மரியாதையை செலுத்துவதற்காக, இரண்டு அறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

விதிமுறைகளுக்குட்பட்டு, ஒரு நேரத்தில் ஒரு அறையில் 20 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

விளம்பரம்