புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2020

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி? முதியவர்கள் இது நாள் வரை 884 பேர்: வெளியான முக்கிய தகவல்

பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 471 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நர்சிங் ஹோம்களில் குறைந்தவது 880-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பிரான்சில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 471 பேர் மருத்துவமனைகளில் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பிரான்சில் இருக்கும் நர்சிங் ஹோம்களில் 880 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது மருத்துவமனை அல்லாத இறப்பு விகிதங்களில் முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நர்சிங் ஹோம்களில் 884 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் பிரான்சின் சுகாதார இயக்குநர் Jérôme Salomon தெரிவித்துள்ளார்.

பிரான்சில் இதற்கு முன்னர் மருத்துவமனைகளில் மட்டுமே இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வந்திருந்தது.

ஆனால் முதியவர்கள் பலர் வீடுகளில் மருத்துவமனைகளுக்கு வராமல் உயிரிழந்துள்ளனர், ஆனால் அவர்களின் இறப்பு கணக்கிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad