புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 ஏப்., 2020

வெளியே செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரம் - கையெழுத்துப் பிரதிக்கான நடைமுறைகள்!
6ம் திகதி முதல் செல்பேசியிலும் வெளியே செல்லும் அத்தாட்சிப் பத்திரம் - உள்துறை அமைச்சகம் - விபரம்!


உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிளிலிருந்து பிரான்சில் 380.000 பேரிற்குக் குற்றப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இது சிறிதளவு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினைப் பெரும்பாலானோர் மதிக்கின்றனர். அத்துடன் 50அ2 அளவாக வீட்டிற்குள் பலபேர் உள்ளிருப்பிற்குள் இருப்பதற்கும், பெரிய வீடு தோட்டம் என உள்ளிருப்பிற்குள் இருப்பதற்கும் பெரும் வேறுபாடும் கஸ்டமும் உண்டு என்பதை நான் உணர்வேன். இருப்பினும் கொரோனாத் தொற்றுச் சங்கிலியை முறியடிப்பதற்கு உள்ளிருப்பை விட வேறு வழியில்லை. இதனால் சட்டத்தை மதிப்வர்களிற்கு நாம் ஒரு சலுகையைச் செய்தாகவேண்டும்' என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் வெளியே செல்லும் அத்தாட்சிப் பத்திரமானது, எதிர்வரும் 06ம் திகதி முதல் செல்பேசியிலும் உபயோகப்படுத்தும் முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
உள்ளிருப்பு ஆரம்பிக்கப்பட்டவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட செல்பேசித்தளம் மூலம் தனிப்பட்ட தகவல்களைக் களவாடும் வாய்ப்பு இருந்தது.
ஆனால் இப்போது அறிமுகப்படுத்தப்படும் இந்தச் செயலி, மிகவும் பாதுகாப்பானது. இதில் உங்கள் தரவுகளுடன், புறப்படும் நேரம், காரணம் என்பன நிரப்பப்பட்டவுடன் அது ஒரு QR CODE இனை உருவாக்கும்.
தெலைபேசியயைத் தொடாமல், தங்கள் கருவி மூலம் QR CODE இனைக் காவற்துறையினர் SCAN செய்யும் போது, அவர்கள் அனைத்துத் தரவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும். எத்தனை மணிக்கு இந்த அத்தாட்சிப் பத்திரம் நிரப்பப்பட்டது என்றும், எத்தனை மணிக்கு ஞசு உழனந உருவாக்கப்பட்டது என்றும் காவற்துறையினர்க்குத் தெரியும்.
அதனால் முறைப்படி சரியான நேரத்தை நிரப்பி இந்த செயலியை நேர்மையாக உபயோகிக்கும்படி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுக் காலத்தில், அவசியத் தேவைகளிற்காக வெளியே செல்லும் போது, அவசயமான நிரப்பப்பட வேண்டிய Attestation de déplacement dérogatoire இனை உங்களால் அச்சுப் பிரதி (imprimer/print) எடுக்க முடியாவிட்டால், அதைக் கையெழுத்துப் பிரதியாகவும் எழுதி எடுத்துச் செல்லமுடியும்.
ஆனால் இந்தக் கையெழுத்துப் பிரதியில் ஏழு காரணங்களும் பிரதி எடுக்கப்படல் வேண்டுமா என்ற கோள்விக்கு, உள்துறை அமைச்கத்தின் சார்பில், பரிசின் காவற்துறைத் தலைமையகம் (Préfecture de police de Paris) பதிலளித்துள்ளது.
அந்தக் கையெழுத்துப் பிரதியில் முக்கியமாக உங்களது பெயர் மற்றும் பிறந்த திகதி, விலாசம் கட்டாயம் குறிப்பிட்டு விட்டு,
«certifie que mon déplacement est lié au motif suivant autorisé par l’article 3 du décret du 23 mars 2020 prescrivant les mesures générales nécessaires pour faire face à l’épidémie de Covid-19 dans le cadre de l’état d’urgence sanitaire»
என்ற வாசகம் கட்டாயம் எழதப்படல் வேண்டும்.
அதன் பின்னர் வழங்கப்பட்ட ஏழு காரணிகளுள், வெளியே செல்வதற்காக, உங்களிற்கான காரணத்தை மட்டம் எழுதி, அதன் பின்னே கீழே திகதி, புறப்படும் நேரம், மற்றும் கையெழுத்து அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது