புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2020

கோவில் சன்னதிக்குள் ஒருவரின் தலையை துண்டித்த பூசாரி: பொலிசாரிடம் சொன்ன மிரளவைக்கும் காரணம்

இந்தியாவில் கடவுள் கனவில் வந்து கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர நரபலி கேட்டதாக கூறி நபர் ஒருவரை கோவில் சன்னதியில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கின் அமைந்துள்ள பிராமணி தேவி கோவிலில் பூசாரியாக இருப்பவர் சன்சாரி ஓஜா.

இவர் இரு தினங்களுக்கு முன்னர் 52 வயது நபரை கோவில் சன்னதிக்குள் அழைத்து வந்து கடவுள் முன்னிலையில் அவரின் தலையை துண்டாக வெட்டி கொன்றுள்ளார். பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.

அப்போது பொலிசாரிடம் சன்சாரி கூறுகையில், என் கனவில் பிராமணி தேவி அம்மன் வந்து நரபலி கேட்டார், அப்படி செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வரும் என கூறினார்.

கடவுளே சொன்னதால் தான் இப்படி செய்தேன் என கூறி பொலிசாரை அதிரவைத்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சன்சாரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

ad

ad