புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2020

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையாம்

இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை வலியுறுத்தியுள்ளது. இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.


இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை வலியுறுத்தியுள்ளது. இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை யுத்த வீரர்களை இலக்கு வைப்பதை சகித்துக் கொள்ளாது – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச என இந்துவில் வெளியான விடயம் குறித்து தனது பதிலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ளது.

குறிப்பிட்ட செய்தியில் இலங்கையின் பல படைவீரர்கள் குறிப்பாக சிரேஸ்ட அதிகாரிகள் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு, எந்த ஆயுதமோதலின் போதும் தனிநபரின் மனித உரிமையை பேணுவது மழைகாலத்தில் சேறு உருவாவதை தடுப்பதை போன்ற விடயம் என தெரிவித்துள்ளது.

யுத்தங்களின் கொந்தளிப்பான நிலை காரணமாக சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ஒருவர் பின்பற்றவேண்டிய தெளிவான விடயங்களை முன்வைக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை படையினர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என எந்த உத்தியோகபூர்வ ஆவணமும் நிருபிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எட்டுபொதுமக்களை கொலை செய்த படைவீரர் ஒருவருக்கு ராஜபக்ச பொதுமன்னிப்கு வழங்கி விடுதலை செய்தமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ரத்னாயக்கவிற்கு தண்டனை வழங்குவதற்கு 13 வருடங்கள் எடுத்த போதிலும் இலங்கை நீதிமன்றம் இன்னும் நியாயமான சந்தேகங்களை கொண்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை 14500 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது அவர்கள் மத்தியில் ரத்னாயக்க போன்று மோசமான நடவடிக்கைளில் ஈடுபட்டவர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதன் காரணமாக மன்னிப்பு வழங்குவது நியாயமற்றதோ அல்லது ஒழுக்கமற்றதோ இல்லை என குறிப்பிட்டுள்ளது.

இலங்கை இராணுவதளபதி யுத்தகுற்றச்சாட்டிற்கு உள்ளான ஜெனரல் என தெரிவிக்கப்பட்டிருப்பது மிகவும் நியாயமற்றது எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ad

ad