புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2020

இந்தியா– சீனா எல்லை விவகாரம்: பதற்றத்தை அதிகரிக்க வேண்டாமென ஐ.நா வலியுறுத்தல்

இந்தியா- சீனா எல்லை விவகாரத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் எந்தவொரு தரப்பும் ஈடுபட கூடாதென ஐ.நா.வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மற்றும் சீனா எல்லை விவகாரத்தில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை தொடர்நது முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் எந்ததொரு முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் மே 5ஆம் திகதி முதல் லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அதிக அளவிலான இராணுவ வீரர்களை குவித்து வருகிறது.

இதனால் இந்திய இராணுவமும் எல்லையில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதனையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியா – சீனா எல்லை விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவீட் செய்திருந்தார்.

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா.செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “இந்த இக்கட்டான சூழ்நிலையில் யார் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரெஸ் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் பதற்றங்களை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.

அத்துடன் யார் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையை கவனித்து வருகின்றோம். எனவே பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம்” என ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்

ad

ad