புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2020

அட்சகர் தற்கொலை-லூசிஹாம் சிவன் கோவிலால் மறைக்கப்பட்ட சில உண்மைகள்: அங்கே நடந்தது என்ன ?

நேற்று முந்தினம்(27) அன்று அதிகாலை 4 மணி அளவில் லூசிஹாம் சிவன் கோவில் அட்சகர் கோபி ஐயா அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு மார்ச் மாதம் 20 திகதி அன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மிக மிக லேசான கொரோனா தொற்று என்பதனால், அது அவருக்கு 12 நாட்களில் மாறி விட்டது. இது போக லூசிஹாம் சிவன் கோவிலில் பல அட்சகர்களுக்கு கொரோனா தாக்கம் இருந்துள்ளது. அதிலும் ஒரு அட்சகர் கடுமையாக தாக்கப்பட்டு பல நாட்கள் வைத்தியசாலையில் இருந்துள்ளார்.

ஆனால் இந்த விடையம் தெரிந்தால், பின்னர் கோவில் திறந்தால் கூட மக்கள் அங்கே வரமாட்டார்கள் என்று கருதி இது போன்ற பல விடையங்களை கோவில் ஆட்களும் அட்சகர்களும் மறைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் குறித்த தற்கொலையும் நடந்துள்ளது. தற்போது பொலிசார் விரிவான விசாரணைகளில் இறங்கியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. கோபி ஐயா அவர்களின் உடல்பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே எதனையும் உறுதியாக சொல்ல முடியும் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

லூசிஹாம் சிவன் கோவில் ஏற்கனவே சிங்கள ராணுவத்தோடு சேர்ந்து இயங்கி வருவதாக பல குற்றச்சாட்டுகள் முன்னர் எழுந்ததும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்

ad

ad