புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 மே, 2020

www.pungudutivuswiss.com
எல்லைகள் திறப்பு எப்போது?: தகவலை உறுதி செய்தது சுவிட்சர்லாந்து
பிரிந்திருக்கும் குடும்பங்கள் மீண்டும் இணையும் வகையில் எல்லைகளைத் திறப்பது குறித்த தகவலை உறுதி செய்துள்ளது சுவிட்சர்லாந்து.

இம்மாதம் 11ஆம் திகதி (மே மாதம்) சுவிஸ் எல்லைகள் திறக்கப்பட இருக்கின்றன. பிரிந்திருக்கும் குடும்பங்கள் மீண்டும் இணையும் வகையில், கொரோனா எல்லைக் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த இருப்பதை சுவிட்சர்லாந்து உறுதிசெய்துள்ளது.

சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில், சுவிட்சர்லாந்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட இருப்பதாக பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.

சுவிஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவது மே மாதம் 11ஆம் திகதி முதல் சாத்தியமாக உள்ளது.

இருந்தாலும் எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழிட உரிமம் வைத்திருப்போர் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்தோ, தேவையான ஆவணங்கள் குறித்தோ விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை.


ஒருவரை நாட்டுக்குள் அனுமதிப்பது எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் முடிவுக்கு விடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஒருவரது கணவன் அல்லது மனைவி, பதிவு செய்துள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு அனுமதியளிக்கப்படும் நிலையில், தாத்தா பாட்டியை பார்க்க அனுமதிப்பது இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தலின் கீழ் கொடுக்கப்படவில்லை என நீதித்துறை தலைவர் Karin Keller-Sutter தெளிவுபடுத்தியுள்ளார்.

சுவிஸ் குடிமக்கள், வாழிட உரிமம் வைத்திருப்போர் மற்றும் எல்லை கடக்கும் உரிமம் வைத்திருப்போர் ஆகியோர் சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பிற காரணங்களுக்காக சுவிட்சர்லாந்துக்கு வருகை தர விரும்புவோருக்கு கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.