புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 மே, 2020

www.pungudutivuswiss.com
இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,301 ஆக உயர்வு
இந்தியாவில் கொtஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,301 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,218 ஆக நேற்று உயர்வடைந்து இருந்தது. 9,951 பேர் குணமடைந்தும், 26,167 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 336 ஆக உயர்வடைந்து இருந்தது.


இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,218ல் இருந்து 1,301 ஆக உயர்வடைந்து உள்ளது. 10 ஆயிரத்து 633 பேர் குணமடைந்தும், 28,046 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 336ல் இருந்து 39 ஆயிரத்து 980 ஆக உயர்வடைந்து உள்ளது.