5 மே, 2020

www.pungudutivuswiss.com
இலங்கையில் எடடாவது   நபர்  கொரோனாவுக்கு பலி கொவிட் 19 ஆல் உயிரிழந்த பெண்ணின் சடலம் தகனம் செய்யப்பட்டது


ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்த பெண்ணின் சடலம் தகனம் செய்யப்பட்டது.

கொட்டிகாவத்த மயானத்திலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்டவழிகாட்டுதலின் கீழ் இறுதி சடங்கு நடைபெற்றது.

குருநாகலையைச் சேர்ந்த 72 வயதான குறித்த பெண் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்தார்.


இந்த பெண் ஏற்கனவே சிறுநீரக தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.