புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 மே, 2020

www.pungudutivuswiss.com
யாழில் இடம்பெற்ற பாரிய கொள்ளை! மூன்று இளைஞர்கள் கைது
யாழில் சுமார் 2 லட்சம் பெறுமதியான தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள் மற்றும் காஸ் சிலிண்டர்கள் திருடி விற்பனை செய்த மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்தே நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் அரசடி பகுதியைச் சேர்ந்த 20 முதல் 25 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களால், திருடப்பட்ட பொருட்களின் உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் அரசடிப் பகுதியைச் சேர்ந்த இம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட பொருட்களை கல்வியங்காடு மற்றும் கட்டப்பிராய் பகுதிகளில் கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை, அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.