புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2020

முக்கிய வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஆபிரகாம் சுமந்திரன் 1, ஆர்ணல்ட் 2, ரவிராச் சசிகலா 3, சரவணபவன் 4, சித்தார்த்தன் 6, மாவை சேனாதிராஜா 8, ஸ்ரீதரன் 10 ஆகிய விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் விஜயகலா மகேஸ்வரன் 8 விருப்பு இலக்கத்தில் போட்டியிடுகின்றார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் அனந்தி சசிதரன் 1, சிவாஜிலிங்கம் 5, சி.வி. விக்கினேஸ்வரன் 6, ஸ்ரீகாந்தா 7 ஆகிய விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் அங்கஜன் ராமநாதன் 1 ஆம் விருப்பு இலக்கத்தில் போட்டியிடுகின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உமாசந்திர பிரகாஷ் 3 விருப்பு இலக்கத்தில் போட்டியிடுகின்றார். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் டக்லஸ் தேவானந்தா 5ஆம் விருப்பு இலக்கத்தில் போட்டியிடுகின்றார். வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் 1, சார்ல்ஸ் நிர்மலநாதன் 3, சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா 7, சிவமோகன் 8 விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் காதற் மஸ்தான் 4ஆம் விருப்பு இலக்கத்தில் போட்டியிடுகின்றார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரிஷாத் பதியுதீன் 1 ஆம் விருப்பு இலக்கத்தில், உனைஸ் பாரூக் 9 ஆம் விருப்பு இலக்கத்திலும் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஸ்ரீநேசன் 4, யோகேஸ்வரன் 8 ஆம் விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலிசாகிர் மௌலான 1 விருப்பு இலக்கத்தில் போட்டியிடுகின்றார்

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அமீர் அலி 1 விருப்பு இலக்கத்தில் போட்டியிடுகின்றார். திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஆர்.சம்பந்தன் 1, சச்சிதானந்தம் 2 ஆகிய விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர்

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அப்துல்லா மகரூப் 2, இம்ரான் மகரூப் 4 ஆகிய விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். பொலநறுவை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 7 ஆம் விருப்பு இலக்கத்திலும், பதுளை மாவட்டத்தில் செந்தில் தொண்டமான் 2ஆம் விருப்பு இலக்கத்திலும் போட்டியிடுகின்றனர்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயோச்சைக் குழு வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர்களின் விருப்பு இலக்கங்களை வெளியிடவேண்டும் என தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை விடுத்து உறுப்பினர்களின் விருப்பு இலக்கங்களை வெளியிட்டுள்ளது.

477 பக்கங்களை கொண்டதாக இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மஹிந்த தேசப்பிரிய, என்.வி.அபேசேகர, பேராசிரியர் ரதனஜீவன் ஹூல் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த காரணிகளை கூறினார்.

விருப்பு இலக்கம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் திணைக்களம் அரச அச்சகத்திற்கு அனுப்பியுள்ளோம். அதேபோல் அரசியல் கட்சிகளுக்கும் ஒவ்வொரு பிரதியை நாம் அனுப்பிவிட்டோம். எனவே தேர்தலுக்கான முதல்கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துவிட்டோம் என்றார்.

கொழும்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் ;ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பு இலக்கம் ; 15, சண்முகநாதன் குகவரதனின் விருப்பு இலக்கம் 17, ரவி கருணாநாயக்கவின் விருப்பு இலக்கம் 18, முஹம்மட் பைரூஸ்ஸின் விருப்பு இலக்கம் 13 என்ற அடிப்படையில் கொழும்பில் போட்டியிடுகின்றனர்.


தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திசாநாயக 1ஆம் இலக்கத்திலும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாச 20, ; சம்பிக்க ரணவக்க 1, எ.எச்.எம் பௌசி 4, மனோ கணேசன் 7, மரிக்கார் 8, யோகராஜ் ராம் 9, ஹர்ச டி சில்வா 10, வி.ஜனகன் 11, முஜிபூர் ரஹ்மான் 16, ஹிருனிக்கா பிரேமச்சந்திர 21 ஆகிய விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தினேஷ் குணவர்தன 13, உதய கம்மன்பில 8, அனுர பெர்னான்டோ 4, சரத் வீரசேகர 21, விமல் வீரவன்ச 19, விஜயதாச ராஜபக் ஷ 18, சுசில் பிரேமஜெயந்த 1 என்ற விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர்.

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரவூப் ஹகீம் 1, அப்துல் ஹலீம் 2, லக்ஸ்மன் கிரியெல்ல 11, வேலுக்குமார் 12 விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நவீன் திசாநாயக 1, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில்  பழனி திகாம்பரம் 1, மயில்வாகனம் உதயகுமார் 4, வி.ராதாகிருஸ்ணன் 9 ஆகிய விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் அருளானந்தம் பிளிப்குமார் 1, ஜீவன் தொண்டமான் 3, சி.பி.ரத்நாயக 2, எஸ்.பி திசாநாயக 4, கணபதி கனகராஜ் 5, முத்தையா பிரபாகரன் 10, சதாசிவம் சுப்பையா 11 ஆகிய விருப்பு இலக்கங்களில் போட்டியிடுகின்றனர்.குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷ ; 17ஆம் விருப்பு இலக்கத்தில் போட்டியிடுகினார்

ad

ad