புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2020

டிரம்பிற்கு எதிராக 57% பேர் வாக்களித்து உள்ளனர்: அமெரிக்காவை உலுக்கிய கருத்து கணிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது. வரும் நவம்பர் இறுதியில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி காரணமாக அங்கு அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ -பிடன் போட்டியிடுகிறார். அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்க உள்ளது.

சற்று முன் வெளியான ஒரு கருத்து கணிப்பு காரணமாக, அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிஎன்என் செய்தி நிறுவனம் மற்றும் எஸ்எஸ்ஆர்எஸ் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பில் அதிபர் டிரம்பிற்கு எதிராக 57% பேர் வாக்களித்து உள்ளனர். அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற 43 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

2019ல் இருந்து டிரம்பிற்கு எதிராக வந்த கருத்து கணிப்புகளில் இதுதான் மிகவும் மோசமான கருத்து கணிப்பு ஆகும். அவர் இவ்வளவு மோசமான சதவிகிதத்தை இதற்கு முன் எடுத்தது கிடையாது. கடந்த சில மாதங்களில் டிரம்ப் மொத்தமாக 7% இழந்து இருக்கிறார். இந்த நிலையில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கு 57% பேர் ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.

பிடனுக்கு மொத்தம் 14% பேர் தற்போது கூடுதலாக ஆதரவு அளித்துள்ளனர். இதனால் டிரம்ப் தற்போது தோல்வியின் விளிம்பில் இருக்கிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று பலர் அடித்து கூறுகிறார்கள். ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட நபர் டொனால் ரம். கடந்த முறை தேர்தலில் இப்படி தான் ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலரி கிளிங்ரன், ஒரு கட்டத்தில் ரம்பை விட முன்னணியில் இருந்தார். ஆனால் அமெரிக்க எப்.பி.ஐ இயக்குனரை வைத்து, ஹிலரி மீது கிடப்பில் இருந்த ஒரு விசாரணையை மீண்டும் தூண்டி விட்டு அவரது செல்வாக்கை 8% தத்தால் சரித்தவர் ரம் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.www.pungudutivuswiss.com

ad

ad