புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2020

நியாயமான தீர்வுக்கு சிங்களத் தலைவர்கள் தயாராக இல்ல-சித்தார்த்தன்

Jaffna Editor தமிழர்களின் அபிலாஷைகள் தொடர்பாக ஓர் நியாயமான தீர்வை நோக்கி செல்ல சிங்கள தலைவர்கள் தயாராக இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் அபிலாஷைகள் தொடர்பாக ஓர் நியாயமான தீர்வை நோக்கி செல்ல சிங்கள தலைவர்கள் தயாராக இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றுநடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக கூட்டமைப்பை பலர் விமர்சிப்பதாக தெரிவித்த அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு 600 என்று இருந்த அரசியல் கைதிகளில் 100 பேர் அளவிலேயே சிறைச்சாலைகளில் தற்போது இருக்கின்றனர் என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கைப்பற்றப்பட்ட சுமார் 6000 ஏக்கர் காணியில் சுமார் 4000 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பின் அழுத்தத்தினால் யாழ். குடா நாட்டில் மாத்திரம் அபிவிருத்தி பணிக்காக 7000 மில்லியன் ரூபாயை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

ad

ad