புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2020

இந்தியபடையை அழிக்க விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித்பிரேமதாசாவையும் விசாரணை செய்ய வேண்டும-கருணா

Jaffna Editor
இந்தியபடையை அழிக்க விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித்பிரேமதாசாவையும் விசாரணை செய்ய வேண்டும்

இந்தியபடையை அழிக்க சஜித் பிரேமதாசவும் அவரின் தந்தையார் பிரேமதாஸ ஆகிய இவரும் ஆயுதங்கள் துப்பாக்கி ரவைகளை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள்.

எனவே சஜித்பிரேமதாசவையும் சி.ஜ.டி. யினர் விசாரணைக்கு அழைக்கவேண்டும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாவிதன்வெளி பிரதேசத்தில் பிரச்சாரத்தின்போது ஆனையிறவில் ஒரே இரவில் 3 ஆயிரம் இராணுவத்தை கொன்றதாக தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உடனடி விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளது தொடர்பாக அவரிடம் இன்று திங்கட்கிழமை (22) தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

நான் பதிலை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் ஓளிவு மறைவுக்கு ஒன்றுமில்லை கடந்தகாலத்தில் நடந்த கொடிய யுத்தத்தை பற்றிதான் நான் பேசினேன் அதை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்து ஒரு மாற்றத்தை உருவாக்கியதை தான் பிரச்சாரத்தின்போது தெரிவித்தேன் இதை அரசியல் இலாபமடைகினற் சிலர் பூதாகரமாக்கி குறிப்பாக சஜித்பிரேமதாச கடும் முயற்சிகளை எடுத்து பூதாகரமாக்கியுள்ளார்.

உண்மையில் அவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்னை பொறுத்தளவில் இந்தியபடை வெளியேறிய காலத்தில் இந்தியபடையை அழிக்க இவரின் தந்தையாரும் இவரும் துப்பாக்கி ரவைகள் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள்

இந்த விடுதலைப் புலிகளை பலப்படுத்தியவர்கள் ஜக்கிய தேசிய கட்சி இதைப் பார்க்கும் போது அவர்களையும் விசாரணைக்கு அழைக்கவேண்டும். அனுராகுமார திஸநாயக்கா இதைப்பற்றி பேச அருகதையற்றவர் அவர்கள் தங்கள் சொந்த மக்கள் 80 ஆயிரம்பேரை கொலை செய்தவர்கள் எனவே கடந்தகால யுத்தத்தைப்பற்றி கதைத்தேன் ஒழிய தவறாக கதைக்கவில்லை என்றார்.

ad

ad