புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2020

France Dijon நகரில் தொடரும் தேடுதல் வேட்டை! ஆயுதங்கள் மீட்பு! - பலர் கைது

France Editor
இன்று திங்கட்கிழமை Dijon நகரில் மீண்டும் தேடுதல் வேட்டை இடம்பெற்றது.
கடந்த வாரத்தில் இந்நகரில் இடம்பெற்ற வன்முறை வெறியாட்டத்தின் தொடர்ச்சியாக
இந்த தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை இங்கு பாரிய அளவில் தேடுதல் வேட்டை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த 'நடவடிக்கை'யில் 150 CRS அதிகாரிகள் வரை ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் Grésilles நகரப்பகுதியில் பாரிய அளவில் தேடுதல் வேட்டை இடம்பெற்றது. இதற்கு உதவியாக RAiD அதிரடிப்படையினர், நடமாடும் ஜொந்தாமினரும் செயற்பட்டனர்.
இதில் பாரிய அளவில் போதைப்பொருள் மீட்கப்பட்டது. 158 கிராம் கஞ்சா, 233 கிராம் காய்ந்த கஞ்சா செடிகள், 91 கிராம் கொக்கைன், 58 கிராம் கெரோயின் மற்றும் சில போதைமருந்து மாத்திரைகளும் மீட்கப்பட்டன.
கலிபர் வகை துப்பாக்கிகள், ரைஃபிள் வகை துப்பாக்கிகள், 3 கிலோ எடைகொண்ட கலிபர் துப்பாக்கியின் ரவைகள் என பல ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

ad

ad