-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

22 ஜூன், 2020

கூட்டமைப்பினாலேயே எல்லாமும் கிடைத்தது:சித்தர்

Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வடக்கு கிழக்கில் சக்தி பெற்ற, பலம் பொருந்திய கட்சியாக இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கில் பல அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான அபிவிருத்திகள் எமது அழுதத்தத்தினாலேயே இடம்பெற்றுள்ளன என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு தென்மராட்சிப் பகுதியில் ஆதரவு வேண்டி சசிகலா ரவிராஜ் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டுமென விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையினை அவர் மறுதலித்துள்ளார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர்; சயந்தனால் சசிகலாவிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

விளம்பரம்