புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2020

வுஹான் மாகாண மக்களை துரத்தும் துயரம் -உடனடியாக வெளியேற உத்தரவு

Jaffna Editor
கொரோனா தொற்றால் சீனாவின் வுஹான் மாகாண மக்கள் அவஸ்தைப்பட்ட நிலையில் தற்போது அந்த மாகாணத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அணை தொடர்ச்சியாக பெய்து வரும் வரலாறு காணாத மழையால் உடையும் அபாயகரமான நிலையில் உள்ளதால் மேலும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதன்படி அந்த மாகாண மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ள சீன அரசாங்கம் முதல் கட்டமாக 10 கோடி பேரை இடம் மாற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

வரலாறு காணாத மழை காரணமாக The Gorges Dam முழுமையாக நிரம்பிவிட்டது. நேற்று அந்த அணை இருந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் அணையின் அத்திவாரங்கள் முற்றிலுமாக ஸ்திரமற்று போய்விட்டன. அணையில் இருந்து வெளியேற்றப்படும் அதிகபட்ச நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு 100 மடங்கு அதிகமாக உள்ளது. உலகின் முன்றாவது மிகப்பெரிய ஆற்றின் நடுவே இந்த அணை கட்டப்படடுள்ளது. உலகின் மிகப்பெரிய அணையும் இதுவே ஆகும்.

இந்த அணை தற்போது பெய்யும் வரலாறு காணாத மழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக எந்நேரமும் அணை உடையலாம் என்பது திட்டவட்டமாக தெரிந்துவிட்டது. ஒரு வேளை இந்த அணை உடைந்தால் 4 முதல் 50 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் என்பது மட்டும் உறுதி. குறைந்த பட்சம் 5 கோடி பேர் இறப்பார்கள் என்பதால், 20 கோடி பேரை பாதுகாப்பான மாநிலங்களுக்கு உடனடியாக இடம்பெயமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நீரை திறந்தாலும், திறந்து விடும் நீரின் அளவை விட அணைக்கு 100 மடங்கு நீர்வரத்து இருப்பதால் அணையை காப்பாற்றுவது சந்தேகமே. கடைசி 1 மணி நேரத்தில் 163Mtr இருந்து 23 Cmr உயர்ந்து 163.23 Mtr ஆக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் The Gorges Dam தனது முழுக்கொள்ளலவான 175 Mtr அதாவது 600 அடி உயரத்தை அடைந்து அணை நிரம்பி வழியும். தற்போது சீனாவுக்கு உள்ள ஒரே தீர்வு மழை நிற்க வேண்டும். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்யும் என உலக வானிலை மையம் அறிவித்துள்ளதும் வுஹான் மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ad

ad