புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஜூலை, 2020

கோட்டாபயவின் உரைக்கு என்ன நடந்தது? சஜித் அணி முக்கியஸ்தர் கேள்விக்கணை

Jaffna Editor
தேவையேற்படின் எந்தவொரு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிலிருந்தும் விலகத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு 'இராணுவத்தைப் பாதுகாக்கும் ரட்சகர்' போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரைக்கு என்ன நடந்தது?

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க.

இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சம்பிக்க, மேலும் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறைக்குத் தொடர்ந்தும் கட்டுப்பட்டிருப்பது ஏன்?

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பொறிமுறையில் இன்னமும் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தெரிவித்திருக்கிறார்.