புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2020

20 இன் நான்கு பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு

Jaffna Editor20 ஆவது திருத்தச் சட்ட வரைவின் சில பிரிவுகள், நடைமுறையில் உள்ள அரசியலமைப்புடன், முரண்படுவதாக, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 20 ஆவது திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.


20 ஆவது திருத்தச் சட்ட வரைவின் சில பிரிவுகள், நடைமுறையில் உள்ள அரசியலமைப்புடன், முரண்படுவதாக, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 20 ஆவது திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 20 ஆவது திருத்தத்தின் 3, 5, 14 மற்றும் 22 ஆவது பிரிவுகள், அரசியலமைப்புடன் முரண்படுவதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின், பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

3ஆவது மற்றும் 14ஆவது பிரிவுகளை குழுநிலை விவாதத்தின் போது திருத்தம் செய்து இலகுபடுத்தலாம் என்றும், அவ்வாறு செய்தால், 5 ஆவது பிரிவில் உள்ள முரண்பாடு நீக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, 20 ஆவது திருத்த விவாத்த்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. எனினும், நாளை காலை விவாதத்தை ஆரம்பிப்பது என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad