புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2020

தராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்?

Jaffna Editorஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் கவனத்திற்கு லக்ஸ்மன் கதிர்காமர் எடுத்துச்சென்றிருந்த நிலையில் வழமையான அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் ஊடாக தராகி சிவராம் படுகொலை அரங்கேற்றப்பட்டதாக முன்னணி ஆங்கில இணையமான தமிழ் நெட் இன் பிரதம ஆசிரியரும் தராகி சிவராமின் நெருங்கிய சகாவுமான ஜெயச்சந்திரன் அம்பலப்படுத்தியுள்ளார்.

வன்னியில் விடுதலைப்புலிகள் தலைமையுடனான சந்திப்பொன்றின் போது சான்றுகளினதும் அரச புலனாய்வு கட்டமைப்புக்களது உள்ளக முகவர்களது தகவல்களின் அடிப்படையிலும் இதனை உறுதிப்படுத்தி அவர்கள் தெரிவித்திருந்ததாகவும் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்

ad

ad