புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2020

பொபினிக்கு வருகை தரும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!

இன்று செவ்வாய்க்கிழமை நண்பகலின் பின்னர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பொபினி நகருக்கு வருகை தர உள்ளார்.
சாமுவேல் பற்றி பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டு நான்காவது நாளான இன்று, செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி பொபினியின் Cellule de lutte contre l'islamisme et le repli communautaire (CLIR) பிரிவினரை சந்தித்து உரையாட உள்ளார்.
கடந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தேடுதல் வேட்டைகள் கைதுகள் இடம்பெற்று வரும் நிலையில், அது தொடர்பான கள ஆய்வுகளை மேற்கொள்ள மக்ரோன் அங்கு விஜயம் மேற்கொள்கிறார்.
மாலை 4 மணிக்கு அவர் வருகை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மக்ரோனோடு, உள்துறை அமைச்சர் Gérald Darmanin உம் வருகை தர உள்ளதாக ஜனாதிபதியின் எலிசே மாளிகை அறிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவிக்கும் போது, 'இஸ்லாமிய அடிப்படை வாதம் கொண்ட 51 அமைப்புக்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, Pantin நகர பள்ளிவாசலும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad