புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2020

திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன் மரணம்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் லலிதா ஜுவல்லரி நகை கடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி திருப்பூர் முருகன், பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
📷
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொள்ளை வழக்கில், முருகன் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முருகன் கொடுத்த தகவலின் படி நகைகள் மீட்டெடுக்கப்பட்டன. இந்த கொள்ளை மட்டுமல்லாது பல்வேறு நகைக்கடை கொள்ளை வழக்குகளில் முருகனுக்கு தொடர்பு உள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக  பெங்களூருவில் சிறை  மருத்துவமனையில் கடந்த 6 மாத காலமாக   சிகிச்சை பெற்று வந்த முருகன்  சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்

ad

ad