புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2020

வலுக்கும் மோதல்! பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க துருக்கிய அதிபர் அழைப்பு!

தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்சின் நிலைப்பாட்டை அடுத்து பிரான்சின் பொருட்களை துருக்கிய மக்கள் புறக்கணிக்குமாறு துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
அங்காராவில் தொலைக்காட்சி உரையாற்றுகையில் இன்று திங்கட்கிழமை இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.


பிரான்சில் முஸ்லிங்களுக்கு எதிரான ஒடுக்குமுறை இருந்தால் முஸ்லிம் மக்களைப் பாதுகாக்குமாறு உலகத் தலைவர்கள் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை வெளியிட்ட கருத்துக்களை அடுத்து எர்டோகன் கோபமாக விமர்சித்துள்ளார்.

அத்துடன் முஸ்லிங்களுக்கு எதிரான விரோதம் ஐரோப்பிய நாடுகளில் அரச கொள்கையாக மாறியுள்ளது என்றார் துருகிய அதிபர்.

ad

ad