புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2020

rவடமாகாணத்தில் தொற்று நோய் தடுப்புக்கட்டளைச் சட்டம் தொடர்பில் ஆளுநர் வழங்கிய உத்தரவு

Jaffna Editor
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்புத் தொடர்பான கட்டளைச் சட்டம் தொடர்பான வர்த்தமானியை வடக்கு மாகாணத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் காவல் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள், முகக் கவசம் அணியாதோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இடம்பெற்றது.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை சுகாதார நடைமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தக் கூட்டம் இடம்பெற்றது. சுகாதாரம், கல்வி, உள்ளூராட்சி,காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர்.

வடக்கு மாகாணத்தில் நெடுங்கேணியில் ஏற்பட்ட தொற்று நிலை காரணமாக அவர்களுடன் தொடர்புடையோரை தனிமைப்படுத்த போதுமான இடவசதி இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் வடக்கில் இரண்டு சம்பவங்களால. கொரோனா பரவல் அச்சநிலை காணப்படுவதாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் கொரோனாபரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்புத் தொடர்பான கட்டளைச் சட்டம் தொடர்பான வர்த்தமானியை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர்,காவல் துறையினருக்குபணித்தார்.

ad

ad