புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2020

பிரான்ஸின் நிலைமை; ஊரடங்கு பலன் தராவிட்டால் அடுத்த நடவடிக்கை என்ன?

Jaffna Editor
கொரோனா வைரஸ் உடன் வரும் கோடை காலம் வரை நாம் வாழ்ந்தாக வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் Emmanuel Macron தெரிவித்துள்ளார்.
பொத்துவாஸ் மருத்துவமனைக்கு ஒக்ரோபர் மாதம் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை விஜயம் செய்த அதிபர் Emmanuel Macron வைத்தியப் பணியாளர்களை பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை என்றும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகளில் பெறுபேறுகள் அடுத்த வாரம் அளவிலேயே தெரியவரும், அவை சரியாக அமையாத பட்சத்தில் மேலும் இறுக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அதிபர் Emmanuel Macron மேலும் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கும் தண்டனையும்
பிரான்ஸில் Île-de-France மாகாணத்திலும் ஏனைய எட்டு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு வார காலத்தில் 32 ஆயிரத்து 33 சோதனைகள் நடத்தப்பட்டு 4 778 பேருக்கு காவல்துறையினர் தண்டம் விதித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் பொழுது அத்தாட்சிப் பத்திரங்கள் கைவசம் வைத்திருக்காதையினாலேயேஇவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
12,000 காவல்துறையினரும் இதற்கான கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
பிரான்சில் வாழும் 67 மில்லியன் மக்களில் 46 மில்லியன் மக்கள் ஒக்ரோபர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் நாட்டின் பிரதமர் Jean Castex அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு பலனளிக்காவிட்டால்..
பிரான்ஸில் கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பகுதி பகுதியான உள்ளிருப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என வைத்தியர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
ஊரடங்கு நடவடிக்கையின் பலாபலன் என்பது 15 முதல் 18 நாட்களிலேயே தெரிந்து கொள்ள முடியும்.
அவ்வாறு பலன் ஏற்படாத விடத்து உள்ளிருப்பு நடவடிக்கைக்கு செல்வதன் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம் எனவும் வைத்தியர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த விடயத்தை கருத்தில் கொண்டே பிரதமர் Jean. Castex அவர்கள் அடுத்த வாரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் பற்றிய அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
பரிஸ்-லியோன் போன்ற பெரிய நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றது.
எனவே முதலில் இந்த நகரங்களை உள்ளிருப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தலாம் என வைத்தியர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
குறைபாடுகளைக் கொண்ட திட்டங்களை தற்பொழுது செயல்படுத்தக் கூடாது.
உடனடியாக வார நாட்களில் மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை, சனி ஞாயிறு தினங்களில் முழுமையாக ஊரடங்கு உத்தரவுக்கு உடனடியாக உள்ளாக்க வேண்டும்.
மக்கள் கொரோனா தொற்றைக் கடுமையானதாக எண்ணுகிறார்கள் இல்லை.
வயதானவர்கள் பற்றி சிந்திக்கிறார்கள் இல்லை.
மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் மக்கள் உள்ளனர் என்றும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரான்ஸில் 44 வீதமான தீவிர சிகிச்சை பிரிவுப் படுக்கைகள் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளன.
ஏனைய உடல் உபாதைகள் உடையவர்களுக்கான சிகிச்சைகள் தற்பொழுது தள்ளிப் போடப்பட்டு வருகின்றன.
உள்ளிருப்பு நடவடிக்கை ஒன்றை அமுல் படுத்தும் பட்சத்திலேயே இவற்றை சரி செய்ய முடியும் என பேராசிரியர் Gilles Pialous தெரிவித்துள்ளார்.
உள்ளிருப்பு நடவடிக்கையை நகர வாரியாக, மாகாணவாரியாக மேற்கொள்ள வேண்டும்.
அல்லது வயது வித்தியாசங்களை கருத்தில் கொண்டும் உள்ளிருப்பை நடைமுறைப் படுத்தலாம் என ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக பொருளாதார நிலைகளை கருத்தில் கொள்ளாது உள்ளிருப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என பேராசிரியர் Eric Home தெரிவித்துள்ளார்.
ஒக்ரோபர் 23 ம் திகதி பிரான்ஸில் கொரோனா தொற்று 40032

ad

ad