பொலிகண்டியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு (28) நேற்றைய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரிடம் நடாத்திய விசாரணையில் கடந்த 24 ம் திகதி பலாலி வடக்கு J/254 அன்ரனிபுரத்தில் நடைபெற்ற அந்தியேட்டி வைபவதற்கு சென்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்தியேட்டி வைபவத்தில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் பொலிகண்டி பகுதியில் அவரைச் சூழவுள்ள 4 வீடுகளும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை - மயிலிட்டி - கீரிமலை வழித்தட பயணிகளுக்கு....
கொரோனா தொற்றாளர் பேலியகொட மீன் சந்தையிலிருந்து வந்த பின்னர் சென்ற இடங்கள்
21/10/2020- பருத்தித்துறை - ஜெயாஸ் தையலகம் (மத்திய சந்தைத்தொகுதி) சேட் தைப்பதற்கு மற்றும் பருத்தித்துறை பஸ் நிலைய பகுதி
22/10/2020-பருத்தித்துறை ஜெயாஸ் ரெக்ஸ்
23/10/2020 பலாலிவடக்கு அன்ரனிபுரம்
ஞானப்பிரகாசம் ஞானமணி என்பவருடைய இறுதிக்கிரியை நிகழ்வு
அவரது தாய் தந்தை சென்று வந்த இடங்கள்
1- 22/10/2020 - பருத்தித்துறை - கீரிமலை பேருந்தில் மாலை 3.30 மணிக்கு
பொலிகண்டியில் இருந்து - பலாலிக்கு
2-24/10/2020-கீரிமலை - பருத்தித்துறை பேருந்தில் பலாலியிலிருந்து பொலிகண்டி பகுதிக்கு பகல் - 6.30 க்கு
குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தந்த இடங்களுக்கு சென்றவர்கள் உடனடியாக உங்கள் உங்கள் பகுதி சுகாதார பரிசோதகரிடம் தகவலை தெரியப்படுத்தவும்.
பருத்தித்துறை ஜெயராஜ் தையலகம் மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பணிபுரிந்த வேலையாட்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலிகண்டி பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர் பருத்தித்துறை நகரில் உள்ள ஜெயராஜ் தையலகம் கடையில் உடை தைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அக் கடையில் பணிபுரிந்த வேலையாட்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.