புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2020

விசேட செய்தி --------------------- France லியோன் நகரில்பாதிரியார் துப்பாக்கிச்சூட்டுக்கு பலி! - ஆயுததாரி தப்பி ஓட்டம்..!

சற்று முன்னர் பாதிரியார் ஒரு துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
லியோன் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாதிரியார் லியோனின் 7 ஆம் வட்டாரத்தின் rue du Père Chevrier வீதியில் உள்ள தனது தேவாலயத்தை மூடிக்கொண்டிருக்கும் போது இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தப்பி ஓடியுள்ளான்.
காவல்துறையினர் சம்பவ இடத்தை வந்தடைந்துள்ளனர்.
*****
கைத்துப்பாக்கி ஒன்றினால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இரு தடவைகள் பாதிரியார் சுடப்பட்டுள்ளார் என அறிய முடிகிறது. பொதுமக்களை சம்பவம் இடம்பெற்ற இடத்தை தவிர்க்கும் படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். கொல்லப்பட்ட பாதிரியார் கிரேக்கத்தைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது.
மேலதி விபரங்கள் சில நிமிடங்களில்...

ad

ad