புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2020

வடக்கில் மகாஜன மாணவி சாதனை

www.pungudutivuswiss.com



தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன்

வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன்

சந்திரகுமார் ஆர்வலன் மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மகிசன் இருவரும் தலா 195 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

மகாஜனக் கல்லூரியில் இருந்து 36 பேர் சித்திபெற்றுள்ளனர்.

வயாவிளான் சிறீவேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய 12 மாணவர்கள் சித்தியடைந்தனர். இதை அந்த வித்தியாலயத்தின் அதிபரான யூட் மரியரட்ணம் உறுதிப்படுத்தினார்.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அஸ்வினியா ஜெயந்தன் 196 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்து 139 மாணவர்களும், யாழ்ப்பாணம் புனித பொஸ்கோ வித்தியாலயத்தில் இருந்து 149 மாணவர்களும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.

ad

ad