புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2020

கேபியை கொண்டுவரமுடிந்தவர்களால் அர்ஜீனை கொண்டுவரமுடியவில்லை?

www.pungudutivudwiss.comகே.பியை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்ததுபோல மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையில் ஈடுபட்ட அர்ஜுன் மகேந்திரனையும் அழைத்துவருவோம் என கோட்டாபய ராஜபக்சவும், அவரின் சகாக்களும் கர்ஜித்தனர். ஆனால் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அலோசியஸ் போன்றவர்கள் பிணையில் சென்றுள்ளனர்என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு நெருங்கும் தருவாயிலும் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை –நிறுவனத்தின் நிதிகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது, சூத்திரதாரிகள் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல் ஈஸ்டர் குண்டுதாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரும் தகுதிதராதரம்பாராது தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது.

ஆனால் சஹ்ரானை இயக்கியது யார், அவர்களின் பின்புலம் என்ன போன்ற விடயங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இக்குழுவின் தலைவராக சஹ்ரான் இருக்க வாய்ப்பில்லை. தலைவன் இருப்பதாலேயே சஹ்ரான் தாக்குதலுக்கு சென்றிருக்கக்கூடும். எனவே, இதன் பின்புலம் இன்னும் கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி கிடைக்கவில்லை. மேற்படி இரண்டு விடயங்களையும் செய்வதற்கு கொரோனா வைரஸ் பரவல் தடையாக அமையாது.

கடந்த ஒருவடருட காலப்பகுதியில் கோட்டா தலைமையில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெறவில்லை. எம்மால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கே திறப்பு விழா நடத்துகின்றனர்.” – என்றார் சம்பிக்க ரணவக்க.

ad

ad