புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2020

தவிசாளர் தியாகராஜா நிரோஷை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 பிணை வழங்கிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

www.pungudutivuswiss.com
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 ஆள் பிணையில், முன் பிணை வழங்கி – விடுவித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.பிரதேச சபைக்கு சொந்தமான அச்செழு அம்மன் கோவில் வீதியில் பிரதேச சபையின் தீர்மானமின்றி சட்டத்திற்கு முரணாக அடிக்கல் நாட்டப்பட்டு காட்சிப் பதாகையும் அமைக்கப்பட்டிருந்தது. குறித்த காட்சிப் பதாகையினை தவிசாளர் அகற்றியிருந்தார். இதனால் மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி அதிகார அலகுக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டமை தொடர்பில் தவிசாளர் நிரோஷ் பொது உடமைக்கு சேதம் விளைவித்தார் எனக் குற்றம்சாட்டி கடந்த திங்கட்கிழமை முதல் கைது செய்வதற்கு அச்சுவேலி பொலிஸார் தீவிரமாக முயன்று வருகின்றார்கள்.

இதனையடுத்து நேற்றுமுன்தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் கைதுக்குத் தடை கோரி எதிர்பார்க்கை பிணை விண்ணப்ப மனு தவிசாளர் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டது.

தவிசாளர் நிரோஷ் மீதான குற்றச்சாட்டு வழக்கை பொலிஸார் முன்னெடுக்கும் போது முழுமையான ஒத்துழைப்பை வழவங்குவதுடன், நீதிமன்றில் தவறாது முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த விண்ணப்பம் மீதான விசாரணை இன்று மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விண்ணப்பதாரர் நிரோஷுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டத்தை பொலிஸார் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் விண்ணப்பதாரர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன், எதிர்பார்க்கை பிணைக்கான காரணத்தை எடுத்துரைத்தார். அதனால் விண்ணப்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்று, எதிர்பார்க்கை முன் பிணை வழங்கி கட்டளையிட்டது.

ad

ad