புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2020

ஆடையை கிழித்துக்கொண்டு அருகில் இருந்த ஆணை கட்டியணைத்தார் பெண் தவிசாளர்? - நேரடிச் சாட்சி

www.pungudutivuswiss.com

ஆடையை கிழித்துக்கொண்டு அருகில் இருந்த பிரதி தவிசாளரை பெண் தவிசாளர் கட்டி அணைத்ததை தாம் கண்டதாக அங்கே நின்றவர்கள் சாட்சி பகர்கின்றார்கள்.

இந்த விவகாரம் தற்பொழுது மட்டக்களப்பில் பூதாகரமாகியுள்ளது.

வாழைச்சேனை பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோல்வியடையும் என்பதால், வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்காமலிருக்க TMVP தவிசாளர் செய்த காரியமே இது என்று குற்றம்சுமத்துப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆளுகையிலுள்ள இந்த சபையில் பெரும்பாலான உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா நிலவரத்தை காரணம் காட்டி சபையை காலவரையின்றி தவிசாளர் ஒத்திவைத்தார்.

அத்துடன், உறுப்பினர்கள் சபை அமர்விற்கு சென்றபோது, பொலிசாரை நிறுத்தி அச்சுறுத்த முற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

இந்த நிலையில் கிழக்கு உள்ளூராட்சி ஆணையாளரிடம் எதிர்க்கட்சிகள் வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், 7 நாட்களில் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருவதற்கு முன்னதாக ஆளுங்கட்சியினர் கூடி வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க தயாராக இருந்துள்ளனர். ஏனைய உறுப்பினர்கள் நுழைய முடியாதவாறு வாயில்கள் அடைக்கப்பட்டிருந்தன.

எதிர்க்கட்சிகள் பலவந்தமாக கதவை திறந்து கொண்டு நுழைய முயன்ற போது, தவிசாளர் ஓடிவந்து, பிரதி தவிசாளர் உள்நுழைய முடியாதவாறு கட்டிப்பிடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

பின்னர் எதிர்தரப்பினர் உள்நுழைந்து, தவிசாளரின் பிடியிலிருந்து பிரதி தவிசாளரை இழுத்து எடுத்தனர்.

எதிரணியினரும் உள்நுழைந்ததும், அங்கு களேபரம் ஏற்பட்டது.

தவிசாளர் தனது ஆடைகள் கிழிக்கப்பட்டதாக தாக்கப்பட்டதாக கூறி வைத்தியசாலையில் அனுமதியாகியிருந்தார்.

தமது தரப்பினரை வைத்து, தவிசாளரே தனது ஆடையை கிழித்து விட்டு நாடகம் ஆடுவதாக எதிரணியினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.

அத்துடன் பிள்ளையான் தம்பி சபையை குழப்பியதாக உறுப்பினர்கள் கூச்சலிட்டமை குறிப்பிடத் தக்கது.

ad

ad