-

9 டிச., 2020

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்!வவுனியா நகரசபை ஊழியர்!!

www.pungudutivuswiss.com

வவுனியா நகரசபை ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக

தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வவுனியா நகரசபை ஊழியர் பாபு (49) என்பவரே உயிரிழந்தார்.ஒரு வாரத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் அவர் விபத்திற்குள்ளாகியிருந்தார்.
 
இதனையடுத்து படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ad

ad