புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2020

டோவரில் பிரித்தானியா ஆர்மியை இறக்க திட்டம்: 60,000 ஆயிரம் லாரிகள் நிற்க்கும் இடம் இதுதான் !

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் செல்ல முடியாமல் சுமார் 60,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார ஊர்திகள் டோவரில் தங்கி நிற்கிறது

. நாளை 23ம் திகதி அவர்களை பிரன்சுக்குள் அனுமதிக்க முடியும் எனவும். ஆனால் அந்த பார ஊர்த்தியை ஓட்டும் நபர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் தேவை என்றும் பிரான்ஸ் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பிரித்தானியா ராணுவத்தினர் சற்று முன்னர் களத்தில் இறக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா ராணுவ வீரர்கள், ஓட்டுனர்களுக்கான கொரோனா பரிசோதனைகளை செய்து. உடனடியாக அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க திட்டம் தீட்டியுள்ளார்கள். இன்று முதல் நாளை காலை வரைக்கும் 6,000 ஓட்டுனர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்து முடிக்கப்படும் எனவும். மேலும் கடு கதி வேகத்தில் பரிசோதனைகளை செய்து. அவர்களை பிரான்ஸ் செல்ல அனுமதித்தால் தான். அவர்கள் மேலதிக பொருட்களை ஏற்றிக் கொண்டு மீண்டும் பிரித்தானியா வருவார்கள்.

இதேவேளை ஸ்பெயின் நாட்டில் இருந்து வரும் பழவகைகள், பிரித்தானியாவில் கையிருப்பில் இல்லை. மேலும் பால் , சீஸ் போன்ற உணவுப் பொருட்களுக்கு இன்னும் சில நாட்களில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ad

ad