புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2020

தமிழ் அரசியல் கைதி கண்ணதாசனுக்கு கொரோனா!

www.pungudutivuswiss.com
புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தமிழ் அரசியல் கைதியான யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் நல்லை கண்ணதாசனுக்கு கொரோனாத் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டதாக அவருடைய வழக்கு விசாரணையை முன்னெடுக்கும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அவரை வீடு அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கண்ணதாசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவரது வழக்கை மீள விசாரிக்கும் வகையில், அவரை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது. எனினும் தொடர்ந்தும் மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

ad

ad