புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2020

புதைக்கும் உரிமையை மறுப்பது அடிப்படை உரிமை மீறல்!

www.pungudutivuswiss.com

முஸ்லிம் மக்கள் தமது மத கொள்கைகளுக்கு ஏற்ப உடல்களை புதைக்கும் உரிமையை மறுப்பது அடிப்படை உரிமை மீறலாகும். இது தொடர்பில் அரசு தாமதமின்றி

இறுதி முடிவுக்கு வர வேண்டும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடிய போது ஒருமனதாக இந்த நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது என நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவ நிபுணர்களின் பார்வையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பது தீங்கும் ஏற்படாது எனத் தெரிகிறது. உலகெங்கிலும் பல நாடுகளிலும் உடல் மற்றவர்களுக்கு தீங்கை ஏற்படுத்தாது என்ற அடிப்படையில் புதைக்கப்படுவதாக தெரிகிறது என்பது சுட்டிக்காட்டியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ad

ad