புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2020

போதைபொருள் கடத்தலில் Seine-Saint-Denis மாவட்டம் முதலிடம்! - அமைச்சர் வெளியிட்ட தகவல்

www.pungudutivuswiss.com
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
 
<<கடந்த மாதங்களில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.>> என உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார். 
 
மேலும், உள்துறை அமைச்சராக தாம் பொறுப்பேற்றதன் பின்னர் இதுவரை 3,952 போதைப்பொருள் விற்பனை இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
 
<<காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் ஒவ்வொரு போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் பிடிக்க வேண்டும். நான் இது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் தொடர்புகொண்டு விசாரிப்பேன்!>> என Gérald Darmanin  தெரிவித்தார். 
 
அதேவேளை, போதைப்பொருள் அதிகம் விற்பனையாகும் மாவட்டங்களில் Seine-Saint-Denis மாவட்டமே முன்னிலையில் உள்ளது எனவும், இங்கு இதுவரை 276 போதைப்பொருள் விற்பனை இடங்கள் அழிக்கப்பட்டுள்ளது  எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
 
இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகம் ஒன்றுக்கு உள்துறை அமைச்சர் வழங்கிய பேட்டியிலேயே மேற்படி தகவல்களை வெளியிட்டார். 

ad

ad