புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2021

பாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில் தொற்று தீவிரம்! வார இறுதிகளில் பொது முடக்கம்

www.pungudutivuswiss.com
பிரான்ஸ் முழுவதும் வைரஸ் தொற்று நிலைவரம் கடந்த சில நாட்களில் தீவிரமடைந்துள்ளது என்று பிரதமர் Jean Castex நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்திருக்கிறார்.புதிய கட்டுப்பாடுகள் மார்ச் 6ஆம் திகதி அறிவிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் பாரிஸ் உட்பட புற நகரங்கள் அடங்கலாக நாடு முழுவதும் இருபது மாவட்டங்கள் தீவிர தொற்று வலயங்களாக அடையாளம் காணப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தி ருக்கிறார்.
இல்-து-பிரான்ஸின் Paris , Essonne , Hauts-de-Seine , Seine-et-Marne , Seine-Saint-Denis , Val-de-Marne , Val-d’Oise , Yvelines மாவட்டங்கள் தொற்றுப் பிரதேசங்களில் உள்ளடங்குகின்றன.
“இந்த மாவட்டங்களில் ஒரு லட்சம் பேரில் 250 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக மதிப்பிடப்பட்டுள் ளது. அடுத்த சில நாட்கள் நிலைமையை மதிப்பீடு செய்ய இருக்கின்றோம். அதன் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும்.” – என்றும் பிரதமர் கூறினார்.
Keine Fotobeschreibung verfügbar.
வார இறுதி நாட்களில்(சனி, ஞாயிறு) பொது முடக்கத்தை அமுல் செய்வது போன்ற தீவிரமான புதிய கட்டுப்பாடு களை நடைமுறைப்படுத்துவது பற்றிய முடிவு வரும் மார்ச் 6ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. Nice மற்றும் Dunkirk பகுதிகளில் ஏற்கனவே வார இறுதி நாள்களில் பொது முடக்கக் கட்டுப் பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரனும் கலந்து கொண்டார். 65 வயதுப் பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் அறிவித்தார்.
நாளாந்த தொற்றுக்களில் அரைவாசி உருமாறிய புதிய ஆங்கில வைரஸ் (English variant) என்பது தெரியவந்துள் ளது என்று செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
நாட்டை முழுவதுமாக முடக்கும் முடிவைத் தவிர்ப்பது அல்லது இன்னும் தாமதிப்பது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை பிரதமரும் சுகாதார அமைச்சரும் தமது கருத்துக்களில் வெளிப்படுத்தி உள்ளனர்
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad