புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2021

இலங்கையின் எதிர்ப்பை மீறி பரிந்துரைகளை செயற்படுத்துவோம்- ஐ.நா மனித உரிமை துணை உயர்ஸ்தானிகர்

www.pungudutivuswiss.com
இலங்கை எழுப்பிய ஆட்சேபனைகளையும் மீறி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்தவுள்ளதாக, ஐ.நா மனித உரிமை துணை உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீப் தெரிவித்துள்ளார்.

இலங்கை எழுப்பிய ஆட்சேபனைகளையும் மீறி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்தவுள்ளதாக, ஐ.நா மனித உரிமை துணை உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீப் தெரிவித்துள்ளார்.

“கடந்த புதன்கிழமை சபையில் முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செய்ல் பெச்லெட் அறிக்கை, இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் திருத்தம் செய்யப்பட்டே தாக்கல் செய்யப்பட்டது.

ஆகவேதான் இலங்கை விவகாரம் தொடர்பான இறுதி ஆவணம் மூன்று வாரங்கள் தாமதமானது. மேலும் இலங்கை தொடர்பான அறிக்கையில் முன்மொழியப்பட்ட சில வழிமுறைகளை செயற்படுத்த பல மாதிரிகள் ஆராயப்படும்.

சிரியா, மியான்மர் அல்லது வட கொரியா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் அல்லது முற்றிலும் புதிய உள்ளமைவு போன்றவற்றை இலங்கை விவகாரத்திலும் கையாளுவது குறித்து பரிசீலிக்க முடியும்.

இதேவேளை பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான சிறந்த அணுனுமுறை எது என்பதை தீர்மானிப்பது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு உள்ளது.

ஆகவே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை தொடர்ந்து ஈடுபடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. என்றும் அவர் கூறியுள்ளார்.

ad

ad