-

26 பிப்., 2021

40 மொட்டு எம்.பிக்கள் வீரவன்சவுக்கு எதிராக போர்க்கொடி

www.pungudutivu
ஆளும் தரப்புக்குள் இருந்து கொண்டு பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை மாற்ற வேண்டுமென தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆளும்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.

அலரி மாளிகையில் இச்சந்திப்பு நேற்று மாலை சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கொண்டுசெல்வதை பஸில் ராஜபக்ஷ, பின்வரிசை உறுப்பினர்களிடம் உறுதிசெய்ததாக அலரி மாளிகை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

மேற்படி சந்திப்பில் 40ற்கும் மேற்பட்ட மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.swiss.com

ad

ad