புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2021

இந்திய அணி ‛த்ரில்' வெற்றி; இங்கிலாந்தை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது

www.pungudutivuswiss.com
ஆமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது 'டுவென்டி-20' போட்டியில் அசத்திய இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் முடிவில் இந்திய அணி 1-2 என, பின்தங்கி இருந்தது. நான்காவது போட்டி, ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்திய அணியில் இஷான் கிஷான், யுவேந்திர சகால் நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், ராகுல் சகார் தேர்வாகினர். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா (12), லோகேஷ் ராகுல் (14) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. கேப்டன் விராத் கோஹ்லி (1) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 31 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 57 ரன் எடுத்தார்.

ரிஷாப் பன்ட் (30), ஸ்ரேயாஸ் ஐயர் (37) கைகொடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா (11), வாஷிங்டன் சுந்தர் (5) நிலைக்கவில்லை. இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாகூர் (10) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட் வீழ்த்தினார்.


latest tamil news



கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பட்லர் (9), டேவிட் மலான் (14) ஏமாற்றினர். ஜேசன் ராய் (40), ஜானி பேர்ஸ்டோவ் (25), பென் ஸ்டோக்ஸ் (46) நம்பிக்கை தந்தனர். கேப்டன் இயான் மார்கன் (4), சாம் கர்ரான் (3), ஜோர்டன் (12) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆர்ச்சர் (18) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து தொடர் 2-2 என, சமநிலை அடைந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி வரும் மார்ச் 20ல் ஆமதாபாத்தில் நடக்கிறது.

ad

ad